நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாநகரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட 125 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story