அரியலூர் மாவட்டத்தில் 9,119 பேர் பள்ளிக்கு வரவில்லை


அரியலூர் மாவட்டத்தில் 9,119 பேர் பள்ளிக்கு வரவில்லை
x
தினத்தந்தி 2 Sept 2021 2:01 AM IST (Updated: 2 Sept 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 9,119 பேர் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிய வந்தது

அரியலூர் 
மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேற்று 180 பள்ளிகள் திறக்கப்பட்டது. 50 சதவீத மாணவ-மாணவிகளுடன் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதால், அரியலூர் மாவட்டத்தில் சுழற்சி முறையில் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் 9-ம் வகுப்பை சேர்ந்த மொத்தம் 10,077 பேரில், 2,937 பேரும், 10-ம் வகுப்பில் 10,824 பேரில், 1,666 பேரும், 11-ம் வகுப்பில் 9,162 பேரில், 2,782 பேரும், 12-ம் வகுப்பில் 8,584 பேரில், 1,734 பேரும் என மொத்தம் 9,119 பேர் பள்ளிகளுக்கு வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மொத்தம் 38,647 பேரில், 29,528 பேர் தான் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

Next Story