தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு; ஆட்டோ டிரைவர் கைது


தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு; ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 2:10 AM IST (Updated: 2 Sept 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் ராமையா தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 65). மகன் முருகன் (24). இவர்களுக்கும், வாசுதேவநல்லூர் மஞ்சனத்திகிணறு தெருவைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் முருகன் (45) என்ற ஆட்டோ டிரைவருக்கும் புதுக்குளம் பகுதியில் வயல்கள் உள்ளன. இரண்டு வயல்களும் அருகருகே உள்ளதால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று மாலை வள்ளியம்மாளும், அவரது மகன் முருகனும் வாசுதேவநல்லூருக்கு மேற்கே புதுக்குளம் வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேரையும் வெள்ளையப்பன் மகன் முருகன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வள்ளியம்மாளும், அவரது மகன் முருகனும் படுகாயம் அடைந்தனர்.
2 பேரும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகனை அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story