பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது


பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 2:13 AM IST (Updated: 2 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது

மேச்சேரி, செப்.2-
ஜலகண்டாபுரம் அருகே கல்லால் தாக்கி பெண்ணை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பெரியக்கா (வயது 38). இவர்கள் இருவரும் தேங்காய் உறிக்கும் கூலி ேவலைக்கு சென்று வந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள புதரில் பெரியக்கா முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்த தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த ஜலகண்டாபுரம் போலீசார் பெரியக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கள்ளக்காதலன் கைது
ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் சவுரியூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பெரியக்கா தேங்காய் உறிக்கும் குடோனில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், பெரியக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்த தகவலை அடுத்து, சுரேசின் வீ்ட்டுக்கு போலீசார் விசாரணை நடத்த சென்றனர். அங்கு அவர் இல்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை போலீசார் தீவிரமாக தேடினர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை நேற்று மாலையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு தகவல்
போலீஸ் விசாரணையின் போது அவர் கூறியதாவது:-
எனக்கும், பெரியக்காவுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்தது. பல முறை நாங்கள் சந்தோசமாக இருந்துள்ளோம். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் நாங்கள் இருவரும் சந்தோசமாக இருந்தோம். 
அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியக்காவை கையால் அடித்து கீழே தள்ளினேன். மேலும் அங்கிருந்த கல்லின் மீது விழுந்தபோது தலையில் அடிபட்டு அவர் மயங்கி கிடந்தார். 
பின்பு நான் அங்குள்ள கல்லின் மீது பெரியக்காவின் முகத்தை இடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டேன். அதன்பிறகு தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர். 
மேற்கண்டவாறு அவர் போலீசில் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுரேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story