கொரோனாவுக்கு ஒருவர் பலி
கொரோனாவுக்கு ஒருவர் பலி
சேலம், செப்.2-
சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 52 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து 55 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் 16 பேர், சேலம் ஒன்றியத்தில் 34 பேர், ஆத்தூர் பகுதியில் 4 பேர், நகராட்சி பகுதியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 96 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 89 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 787 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,632 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story