குண்டர் சட்டம் பாய்ந்தது
தம்பதியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அல்லி நகரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி-அறிவழகி தம்பதியை கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்கள் கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 6 பேரை குன்னம் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில், மேல உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனை ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் மேல உசேன் நகரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 30), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மகேஷ் (22), யுவராஜ் (27), ஸ்ரீராமகிருஷ்ணன் (23), செங்கல்பட்டு மாவட்டம் அமைஞ்சங்கரையை சேர்ந்த சத்யா (20) ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதன்பேரில் மேற்கண்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் இருந்த அவர்களிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை குன்னம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story