292 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 292 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்
நாகமலைபுதுக்கோட்டை
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 292 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
மதுரைக்கு வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் துவரிமான் சந்திப்பு நான்குவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அது தினசரி பெங்களூரு சென்று வரும் ரெகுலர் சர்வீஸ் லாரி என்பதும், டிரைவர்கள் கரடிக்கல்லை சேர்ந்த சுரேஷ் (வயது 30), பல்கலைக்கழக நகரை சேர்ந்த ராஜேந்திரன்(43) என்பதும் தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தனர். அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும், பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லாரி, அதில் இருந்த 292 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களான சுரேஷ், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story