தொழிலாளிகள் மீது தாக்குதல்


தொழிலாளிகள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 1 Sep 2021 9:15 PM GMT (Updated: 2021-09-02T02:45:28+05:30)

கும்பகோணத்தில் தொழிலாளிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்;
கும்பகோணத்தில் தொழிலாளிகளை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். 
ஓட்டல் திறப்பு
கும்பகோணத்தை அடுத்த பழையபாலக்கரையில் பகுதியில் புதியதாக ஓட்டல் திறக்க மராமத்து பணிகள் நடைபெற்றன. அந்த ஓட்டலில்  மரவேலைகளை அண்ணலக்கிரஹாரம், காளிமுத்து நகரை சேர்ந்த  ஹரிஹரன் (வயது42) செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்தார். அவர், ஹரிஹரனிடம் யார் இங்கே ஓட்டல் திறப்பது என கேட்டு  தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஹரிஹரனுக்கு ஆதரவாக வந்த பாலக்கரை கல்யாணராமய்யர் பேட்டையை சேர்ந்த  சித்திரவேலு(40) , முல்லைவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தட்டி கேட்டார். 
கைது 
இதனால் ஆத்திரமடைந்த முல்லைவளவன் தரப்பினர் ஹரிஹரன்,  சித்திரவேலு ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில் ஹரிஹரன், சித்திரவேல் ஆகியோர் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாாின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லைவளவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story