யானை தந்தங்கள், மான் கொம்புகள் அழிப்பு
வேட்டைக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த யானை தந்தங்கள், மான் கொம்புகள் அழிக்கப்பட்டன.
கூடலூர்
வேட்டைக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த யானை தந்தங்கள், மான் கொம்புகள் அழிக்கப்பட்டன.
வனவிலங்குகள் வேட்டை
கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி, தேவாலா, பிதர்காடு, சேரம்பாடி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு கேரள, கர்நாடக எல்லை உள்ளதால், வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெற்றது.
இதில் ஈடுபட்டவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது அவர்களால் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, பாதுகாத்து வந்தனர். மேலும் வனப்பகுதியில் இயற்கையாக உயிரிழக்கும் வனவிலங்குகளின் உடல் பாகங்களையும் வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
தீயிட்டு அழிப்பு
அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூடலூர் வனக்கோட்டத்தில் பறிமுதல் செய்த மற்றும் சேகரித்த வனவிலங்குகளின் உடற்பாகங்களை கூடலூர் கோட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் வைத்து வனத்துறையினர் நேற்று காலை 11 மணிக்கு தீ வைத்து எரித்தனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனச்சரகர் கணேசன், மனோகரன் உள்ளிட்ட வனத்துறையினர் காட்டுயானைகளின் தந்தங்கள், மான் கொம்புகள், புலி நகங்கள் மற்றும் பற்களை தீயிட்டு எரித்து அழித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுயானைகளின் சிறிய அளவிலான தந்தங்கள் 22, மான் கொம்புகள் 27, கடமான் கொம்புகள் 14 கிலோ, புலி நகங்கள் 18, அதன் பற்கள் 4 ஆகியவை அழிக்கப்பட்டது என்றனர்.
Related Tags :
Next Story