அம்மா மருந்தகத்தில் ரூ.5 லட்சம் கையாடல்; பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது


அம்மா மருந்தகத்தில் ரூ.5 லட்சம் கையாடல்; பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 3:16 AM GMT (Updated: 2021-09-02T08:46:20+05:30)

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் அம்மா மருந்தகம் சென்னையில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

போரூர் டிரங்க் சாலையில் உள்ள அம்மா மருந்தகத்தில் காரம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்தாளர் சுபாஷினி (வயது 43), கே.கே. நகரை சேர்ந்த உதவி விற்பனையாளர் கிறிஸ்டோபர் (45) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள அம்மா மருந்தகத்தில் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்கான கணக்குகள் சரி பார்க்கப்பட்டது. அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை விற்று அந்த பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி போரூர் போலீசில் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் தேவராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் மருந்துகளை விற்று பணத்தை கையாடல் செய்ததை பெண் ஊழியர் சுபாஷினி மற்றும் கிறிஸ்டோபர் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story