சோழவரம் அருகே 41 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த பண்டிகாவனூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் ஏழை-எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு சோழவரம் ஒன்றிய குழுத்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த முகாமில் சோழவரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வசேகரன், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், துணை தாசில்தார் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சாரதா ரவி, கனிமொழிசுந்தரம், சந்திரசேகர், சகிலாசகாதேவன், மொழியரசி செல்வம், பத்மபிரியாநாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story