தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடி:
தூத்துக்குடி நேதாஜி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). தனியார் நிதி நிறுவன கிளை மேலாளராக உள்ளார். இவர் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தாராம். புதுக்கோட்டை பாலம் அருகே வந்த போது, ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் நைசாக மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பாலா என்ற பாலமுருகன் (21), செல்வகணேஷ் (20) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story