எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2021 7:41 PM IST (Updated: 2 Sept 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரம்:
ராபி பருவம் தொடங்க உள்ள நிலையில், மானாவாரி நிலங்களில் பயன்படுத்த விவசாயிகளுக்கு கரம்பை மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீது பெற்றுள்ள விவசாயிகளுக்கு நகைகளை உடனடியாக வழங்க வேண்டும். சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட 5 பவுன் நகை கடன் தள்ளுபடியை அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமையா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் செயலாளர் அசோக்குமார், விளாத்திகுளம் செயலாளர் வேலாயுதம், எட்டயபுரம் தலைவர் ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story