ரூ.1 லட்சம் போலி பீடிகள் பறிமுதல் 2 பேர் கைது


ரூ.1 லட்சம் போலி பீடிகள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 8:14 PM IST (Updated: 2 Sept 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ரூ.1 லட்சம் போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கம்பம்:
கம்பத்தில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்பிலான போலி பீடிகள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் அதன்பிறகும் கம்பம் பகுதியில், போலி பீடிகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பிரபல பீடி நிறுவன மேலாளர்கள் கம்பம் பகுதியில் முகாமிட்டு சோதனை நடத்தினர். அப்போது ரேஞ்சர் அலுவலக ரோட்டில் குடியிருந்து வரும் அறிவேந்திரன் (வயது 27), சசிக்குமார் (34) ஆகியோரது வீடுகளில் லேபிள்கள், பேக்கிங் கட்டை, ரப்பர் ஸ்டாம்பு வைத்து போலி பீடிகள் தயாரிப்பு குடிசைத்தொழில் போல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இது குறித்து பீடி நிறுவன மேலாளர்கள், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பீடி பண்டல்கள், போலி லேபிள்கள், பிரபல கம்பெனியின் போலி பெருங்காய தூள், போலி மூக்குப்பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவேந்திரன், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.



Next Story