தேவாரம் அருகே தோட்டத்தில் நிறுத்திய மினி லாரி தீப்பிடித்து சேதம்


தேவாரம் அருகே தோட்டத்தில் நிறுத்திய மினி லாரி தீப்பிடித்து சேதம்
x
தினத்தந்தி 2 Sept 2021 9:00 PM IST (Updated: 2 Sept 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

தேவாரம் அருகே தோட்டத்தில் நிறுத்திய மினி லாரி தீப்பிடித்து சேதமானது.

தேவாரம்:
தேவாரம் அருகே உள்ள தே.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நித்யானந்தம். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலர். இவர் தனக்கு சொந்தமான மினிலாரியை அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நிறுத்தி இருந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை மினி லாரி திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து தோட்டத்தில் வேலை செய்தவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் மினிலாரியின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து, தேவாரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து லாரியில் எப்படி தீப்பற்றியது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story