தாராபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது


தாராபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 9:28 PM IST (Updated: 2 Sept 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது

தாராபுரம், 
தாராபுரம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில்  போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அந்தோணி மகன் பாண்டியன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. 
இந்த நிலையில் 8-ம் வகுப்பு படித்து வரும்  13 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் தனியாக ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அந்த மாணவி தனியாக இருப்பதை கண்ட பாண்டியன் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்த மாணவி,   வீட்டை விட்டு வெளியே வந்து வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். 
கைது
இது குறித்து மாணவியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரித்து, பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Next Story