உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தின் கூடுதல் உலர்க்களங்கள் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தின் கூடுதல் உலர்க்களங்கள் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போடிப்பட்டி,
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தின் கூடுதல் உலர்க்களங்கள் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பொருளீட்டுக் கடன்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளங்களை உலர வைத்து அதன்பிறகே விற்பனை செய்ய முடியும். இதுபோல மல்லி, நிலக்கடலை போன்ற பல விளைபொருட்களை காய வைத்தே விற்பனை செய்ய முடியும்.ஆனால் பெரும்பாலான கிராமங்களில் விளைபொருட்களை உலர வைப்பதற்கு போதிய உலர்களங்கள் இல்லாத நிலையே உள்ளது.இதனால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலர்களங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உலர வைக்கின்றனர்.
அத்துடன் இங்கு மொத்தம் 9 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 சேமிப்புக் கிடங்குகள் உள்ளது.இங்கு விளைபொருட்களை இருப்பு வைக்கவும், பொருளீட்டுக் கடன் பெறவும் வசதி உள்ளது. மேலும் தேசிய வேளாண் சந்தை மூலம் நல்ல விலை கிடைக்கும் போது இங்கேயே விற்பனை செய்து பணமாக்கவும் முடியும்.இவ்வாறு பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர். ஆனால் அவற்றை உலர வைப்பதற்கு இங்கு போதிய உலர்களங்கள் இல்லை. இதனால் இங்குள்ள காங்க்ரீட் சாலைகளில் விளைபொருட்களை உலர வைக்க வேண்டிய நிலை உள்ளது.
பாதுகாப்பற்ற நிலை
தற்போது உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவற்றை உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக சாலைகளில் விவசாயிகள் காய வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்லும்போது நிலக்கடலைகள் சேதமடைவதுடன், விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுபோல மக்காச்சோள அறுவடை சீசனில் அவற்றை காய வைப்பதற்கு, சாலைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கூடுதல் உலர்களங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது வளாகத்தில் 4 உலர்க்களங்கள் உள்ளது.கூடுதலாக 3 உலர்களங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.தற்போது திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் கூடுதல் களங்கள் விரைவில் அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story