கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டி மீட்பு


கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டி மீட்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 4:07 PM GMT (Updated: 2 Sep 2021 4:07 PM GMT)

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டி மீட்பு

தளி, 
உடுமலையை அடுத்த ராமேகவுண்டன்புதூர் அருகே மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயி.இவரது தோட்டம் உடுமலை வனச்சரக மலை அடிவாரப்பகுதியை ஒட்டியவாறு உள்ளது. அங்கு தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அவர் கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து  உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் நிலைய அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் தாமோதரன், தங்கராஜ் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மான்குட்டியை உயிருடன் மீட்டனர்.அதைத்தொடர்ந்து வனவர்கள் சுப்பையா மற்றும் அன்பழகன் ஆகியோரிடம் மான்குட்டி ஒப்படைக்கப்பட்டது.
அது ஆண் மான் குட்டி என்றும் அதன் வயது 6 மாதம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அந்த மான்குட்டியை வனத்துறையினர் உடுமலை வானச்சரகத்தின் அடர்ந்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Next Story