விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி இந்து முன்னணியினர் சாமியிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி  இந்து முன்னணியினர் சாமியிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 2 Sept 2021 9:44 PM IST (Updated: 2 Sept 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி இந்து முன்னணியினர் சாமியிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி  இந்து முன்னணியினர் சாமியிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 போராட்டம் 
விநாயகர் சதுர்த்து விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்து பண்டிகைகளை மட்டும் தடுக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்தும், இதனை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் சாமியிடம் முறையிடும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி மாநகராட்சி அருகே உள்ள குலாலர் பிள்ளையார் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சாமியிடம் முறையிடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பெண்கள் தமிழக அரசை கண்டித்து மண்ணை வாரி தூற்றி சாபமிட்டனர். மேலும், மறியல் போராட்டம் நடந்தது. 
80-க்கும் மேற்பட்ட பகுதிகள்
இதுபோல் மாநில செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் குமரன் ரோடு டவுண்ஹால் பகுதியில் விநாயகர் கோவில் அருகே போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் சிலர் மடிப்பிச்சை கேட்டு முழங்காலிட்டு கோவில் வரை வந்தனர். மேலும், மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் தலைமையில் ஈஸ்வரன் கோவிலிலும், மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் புஷ்பா சந்திப்பு அவினாசி ரோட்டில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலிலும் போராட்டம் நடந்தது. 
 மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன் தலைமையில், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலும், மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில், கொடுவாய் பெருமாள் கோவிலிலும் போராட்டம் நடந்தது.  மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில், தண்ணீர்பந்தல் மாரியம்மன் கோவிலிலும் சாமியிடம் முறையிடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகரில் 22 இடங்களிலும், மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் இந்த போராட்டம் நடந்தது. இதில் விநாயகர் வேடமிட்டும், விநாயகர் சிலைகளை வைத்தும் பலர் பங்கேற்றனர். 
திட்டமிட்டபடி நடக்கும் 
முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:- 
 வருகிற 10-ந் தேதி மிகப்பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி நடக்கும். வீடுகளிலும் விநாயகர் சிலை வைக்கப்படும். தமிழக அரசு இந்து முன்னணியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வருகிற 10-ந் தேதி திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடக்கும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story