தனியார் பஸ் கண்டக்டர் தற்கொலை
மனைவி கோபித்து சென்றதால், தனியார் பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பழனி:
பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்தனகோபால் (வயது 37). தனியார் பஸ் கண்டக்டர். அவருடைய மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் சந்தனகோபால், மதுபானம் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தனகோபாலுக்கும், பூங்கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபித்து கொண்டு ஆயக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பூங்கொடி சென்று விட் டார். இதனால் மனம் உடைந்த சந்தனகோபால், தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தனகோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story