முத்தூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

முத்தூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
x
தினத்தந்தி 2 Sep 2021 4:21 PM GMT (Updated: 2021-09-02T21:51:52+05:30)

முத்தூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

முத்தூர்,
முத்தூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மாவு பூச்சி தாக்குதல்
 மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி என்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. இதன்படி கிழங்கு மரவள்ளிக்கிழங்கில் குருத்து கீழ் இருந்து சாறு உறிஞ்சி பயிர்களை வளரவிடாது.இந்த பூச்சி அதிக அளவில் மரவள்ளி கிழங்கை தாக்கும்.  மரவள்ளி கிழங்கின் இளம் தளிர், தண்டு மற்ற இலையின் அடி பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
 மாவு பூச்சிகள் தாக்குதல் இருந்தால் 3 சதவீத வேப்ப எண்ணெய், ஒரு லிட்டர் நீருக்கு 25 மில்லி லிட்டர் அல்லது மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். 
 3-வது வாரம் ரசாயன பூச்சி கொல்லியான தியோ மெத்தாக்சோம் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும். இவற்றை தெளிக்கும்போது 50 கிராம் காய்கறி நுண்ணூட்டம் சேர்க்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் வெர்டிசில்யம் லக்கானி என்ற உயிராக பூஞ்சான் அதை தெளிப்பதால் மாவு பூச்சியின் மீது நோயை உருவாக்கி அதனை இறக்க செய்யும்.
பூச்சி கொல்லி
மரவள்ளி கிழங்கு சாகுபடியில் மாவு பூச்சி தாக்கிய இலைகள், செடியின் கீழ் பாகத்தில் உள்ள இலைகளை ஒடித்து விட வேண்டும். மேலும் சாய்வு முறையில் செய்தாலும் உன்னை மட்டும் மரவள்ளி கிழங்கை நடவு செய்தாலும், இந்த பூச்சியை கட்டுப்படுத்தலாம். மேலும் முசுக்கொட்டை செடிகள் (மல்பெரி செடி), நெய்வேலி காட்டாமணக்கு செடியை வரப்பு ஓரங்களில் பயிர்செய்து, இந்த மாவு பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.
 மேலும் மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு வயலில் இருந்து அடுத்த அதே சாகுபடிக்கு விதைக்கரணை தேர்வு செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். மேலும் மரவள்ளிக்கிழங்கு வயலில் பயிர் சுழற்சி செய்து வேறு பயிர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இத்தகவலை வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் யு.சர்மிளா தெரிவித்து உள்ளார். 

Next Story