புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு தொற்று பாதிப்பு; 2 பேர் பலி


புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு தொற்று பாதிப்பு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Sept 2021 9:57 PM IST (Updated: 2 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.

புதுச்சேரி, செப்.-
புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.
பரிசோதனை
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 43 பேரும், காரைக்காலில் 23 பேரும், மாகியில் 23 பேரும், ஏனாமில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
176 பேர் மருத்துவமனைகளிலும், 661 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். 
புதுச்சேரியில் நேற்று 38 பேர் குணமடைந்தனர். கடந்த 2 நாட்களான தினசரி பாதிப்பு 100-க்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்று 92 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
2 பேர் பலி
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 16 லட்சத்து 52 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 23 ஆயிரத்து 802 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
காரைக்கால் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்த பி.கே. சாலையை சேர்ந்த 85 வயது மூதாட்டியும், கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளூரை சேர்ந்த 78 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களை சேர்த்து பலி எண்ணிக்கை 1,815 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் சதவீதம் 1.47 ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 97.86 ஆகவும் உள்ளது.
தடுப்பூசி
புதுச்சேரியில் நேற்று சுகாதார பணியாளர்கள் 8 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 1,943 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 19 ஆயிரத்து 44 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story