வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு


வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை  செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Sept 2021 10:04 PM IST (Updated: 2 Sept 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால், செப்-
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை
காரைக்கால் புதுத்துறை பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் இர்ஷாத்அலி (வயது 27). இவரது மனைவி ஷிபா ஷப்ரின் (23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ஷிபா ஷப்ரினின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்தநிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இர்ஷாத் அலி வெளிநாடு சென்று விட்டார். இதையடுத்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி இர்ஷாத் அலியின் தந்தை அபிபுரகுமான் (50), மாமியார் மும்தாஜ் நிஷா (47) மற்றும் உறவினர்கள் அஸ்கரி சுல்தான், திப்பு சுல்தான், முகம்மது ஜவகர், ஷாஜகான் ஆகியோர் ஷிபா ஷப்ரினை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து ஷிபா ஷப்ரின், கணவர் இர்ஷாத்அலிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் ஷிபா ஷப்ரின் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதுதொடர்பாக அவர் காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக ஷிபா ஷப்ரின் கணவர் இர்ஷாத் அலி, மாமனார் அபிபுரகுமான் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story