உலக தென்னை மர தின விழா
வேடசந்தூரில் உலக தென்னை மர தினவிழா கொண்டாடப்பட்டது.
வேடசந்தூர்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் இந்திய வாணிப பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் வேடசந்தூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு உலக தென்னை மர தினத்தையொட்டி தென்னை மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வாணிப ஆராய்ச்சி நிலைய தலைவர் பொன்.மணிவேல் தலைமை தாங்கி பேசினார். வேளாண் விஞ்ஞானி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முதன்மை உழவியல் விஞ்ஞானி குமரேசன் வரவேற்றார்.
மாவட்ட வனத்துறை அலுவலர் பிரபு கலந்து கொண்டு 108 தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
இதில் ஆராய்ச்சி நிலையத்தின் துணை முதன்மை தொழில்நுட்ப அலுவலர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அண்ணாத்துரை, பண்ணை மேலாளர் சமீர் மற்றும் அலுவலக நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தென்னை மர சாகுபடி முறைகள், தென்னை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Related Tags :
Next Story