3 விசைப்படகுகள் பறிமுதல்


3 விசைப்படகுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Sep 2021 5:07 PM GMT (Updated: 2021-09-02T22:37:32+05:30)

மண்டபம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலை களைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பனைக்குளம், 
மண்டபம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலை களைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி சில விசைப்படகுகளில் மீனவர்கள் பிடித்து வருவதாக மீன் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் ஜெய்லானி உள்ளிட்ட கடலோர போலீசாரும் அதிகாரிகளும் இணைந்து கடலோர போலீசாருக்கு சொந்தமான படகில் ரோந்து சென்றனர்.
 அப்போது மண்டபத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மண்டபத்தை சேர்ந்த முபாரக், சயித்ரில்வான், சிந்துஸ்ராணி ஆகியோருக்கு 3 விசைப்படகுகளை நிறுத்தி அந்த படகுகளில் ஏறி சோதனை செய்தனர். 
எச்சரிக்கை
சோதனை செய்து பார்த்ததில் அந்த 3 படகுகளில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளையும் பறிமுதல் செய்த மீன்துறை அதிகாரிகள் அந்த 3 படகுகளில் இருந்த தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடித்ததாக சுமார் 4 டன் மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த அந்த அனைத்து மீன்களையும் ஏலம் விட்டதுடன் தடை செய்யப் ்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக அந்த 3 படகுகளுக்கும் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசல் நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 3 படகில் இருந்த மீனவர்களை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

Next Story