4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்விவரம் வருமாறு:-
அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணிபுரிந்த ஜோசப் கென்னடி, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார ஊராட்சி), அங்கு பணிபுரிந்த ரவி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணிபுரிந்த தனசேகரன் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), அங்கு பணிபுரிந்த குமார் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story