கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Sept 2021 11:16 PM IST (Updated: 2 Sept 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி தொழிலாளி பலியானார்.

திருப்புவனம், 
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது குயவன் குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது60). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.  குயவன்குளம்  தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தாராம். அப்போது மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற கார் தொழிலாளி சாமிக்கண்ணு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. சம்பவம் குறித்து சாமிக்கண்ணு குடும்பத்திற்கும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு சாமிக் கண்ணு இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இந்த விபத்து குறித்து சாமிக்கண்ணுவின் மகன் சரவணன் பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரிதாபாலு பிரேதத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து சாமிக்கண்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story