கொப்பு வாய்க்காலை தூர்வாராததால் வீணாகும் தண்ணீர்


கொப்பு வாய்க்காலை தூர்வாராததால் வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 2 Sept 2021 11:34 PM IST (Updated: 2 Sept 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில் வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வீணாகுகிறது. எனவே குடிமராமத்து திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில் வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வீணாகுகிறது. எனவே குடிமராமத்து திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொப்பு வாய்க்கால் 

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 

இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தில் பகிர்மான கால்வாயில் இருந்து பாசனத்திற்கு செல்லும் கொப்பு வாய்க்கால் தூர்வாராமல் உள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி செல்கிறது. 

தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் 

மேலும் வாய்க்கால் இருப்பதே தெரியாத அளவிற்கு புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குடிமராமத்து திட்டத்தின் நிதி ஒதுக்கியதால் கடந்த 4 ஆண்டு களாக பாசன கால்வாய்கள் தூர்வாருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு இதுவரைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் கால்வாய்களை சீரமைக்க முடிய வில்லை. 

நிதி ஒதுக்க வேண்டும் 

சில இடங்களில் விவசாயிகள் சொந்த செலவில் கால்வாய்களை தூர்வாரி உள்ளனர். தற்போது வரை முதல் சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 4 சுற்று தணணீர் வழங்க வேண்டிய உள்ளது. 

இதற்கிடையில் கால்வாய்கள் சீரமைக்காததால் கடைமடை விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே அரசு குடிமராமத்து திட்டத்துக்கு நிதி ஒதுக்கி கால்வாய்களை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story