மாதனூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்


மாதனூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 2 Sept 2021 11:35 PM IST (Updated: 2 Sept 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

மாதனூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மனவாளன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். 

அதன்படி கன்னடிகுப்பம் ஊராட்சி செயலாளர் பழனி செங்கிலிகுப்பத்திற்கும், அங்கு பணிபுரிந்து வந்த சுப்பிரமணி கன்னடிகுப்பத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

வடகரையில் இருந்த சங்கர் மின்னூருக்கும் மின்னூரில் பணிபுரிந்து வந்த மணிவேல் வடகரைக்கும் மாற்றப்பட்டனர்.

சோலூரில் இருந்த முரளி ஆலங்குப்பத்திற்கும் அங்கிருந்த உமாசங்கர் நாச்சார்குப்பத்திற்கும், அங்கிருந்த அண்ணாதுரை சோலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

வீராங்குப்பம் ஊராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த செந்தில்குமார் விடுவிக்கப்பட்டு சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணாமூர்த்திக்கு வீராங்குப்பம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Next Story