கொரோனாவுக்கு 2 பேர் பலி
வேலூர் மாவட்டத்தி்ல் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தி்ல் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 892 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும், கொரோனா தொற்று பரவி வருகிறது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடு, வீடாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 490 பேர் பலியாகி உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்து வருகின்றனர்.
அதன்படி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2 முதியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு காய்ச்சல், இருமல் அதிகமாக இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story