மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் படுகாயம்
புகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நொய்யல்,
டிரைவர்
கரூர் மூலிமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கோபிநாத் (வயது 26), டிரைவர். இவர், வேலாயுதம்பாளையத்தில் இருந்து தளவாபாளையம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற ஒருவர் கோபிநாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் கோபிநாத் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் கோபிநாத்தை மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story