எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய ஊழியர் கைது
நெல்லையில் எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7½ லட்சம் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குற்றவாளியை பிடிப்பதற்காக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்த ஊழியரான ராஜஸ்தான் மாநிலத்தைச் ேசர்ந்த பர்வேஷ்குமார் (வயது 25) ரூ.7½ லட்சத்தை திருடி, தனது நண்பரிடம் கொடுத்து, அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பர்வேஷ்குமாரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பரையும் பிடிப்பதற்காக சென்னை விரைந்தனர்.
Related Tags :
Next Story