கோழியை விழுங்கிய மலைப்பாம்பு


கோழியை விழுங்கிய மலைப்பாம்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:01 AM IST (Updated: 3 Sept 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. இவர் நேற்று மதியம் வீட்டில் சமைப்பதற்காக வீட்டிற்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகை எடுக்க சென்றார். அப்போது விறகுக்குள் மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளம் இருந்ததாக தெரிய வந்தது. 


Next Story