மதுரை அரசு ஆஸ்பத்திரி ‘லிப்ட்’டில் 13 பேர் சிக்கியதால் பரபரப்பு


மதுரை அரசு ஆஸ்பத்திரி ‘லிப்ட்’டில் 13 பேர் சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:04 AM IST (Updated: 3 Sept 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரி ‘லிப்ட்’டில் 13 பேர் சிக்கியதால் பரபரப்பு

மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் தினமும் சிகிச்சைக்காக ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட மகப்பேறு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் உள்ள ‘லிப்ட்’டில் நேற்று மாலை திடீரென கோளாறு ஏற்பட்டு 2-வது தளத்தில் செல்லும் போது நின்று விட்டது. 
இதனால் லிப்டில் பொதுமக்கள், நோயாளிகள் என 13 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க முயன்ற போது அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தல்லாகுளம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்,  ‘லிப்ட்’டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ‘லிப்ட்’டில் அதிக நபர்கள் ஏறியதால் பழுது ஏற்பட்டதாக தெரியவந்தது.

Next Story