தடுப்பூசி போடாத தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனம் மீது நடவடிக்கை


தடுப்பூசி போடாத தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனம் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2021 1:04 AM IST (Updated: 3 Sept 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போடாதவர்களை பணியமர்த்தினால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை
தடுப்பூசி போடாதவர்களை பணியமர்த்தினால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சித்திரை வீதி
மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வியாபாரம், தொழில் செய்யும் நிறுவனங்கள், தெருவோர வியாபாரிகள், அனைத்து ஓட்டல்கள், தேநீர், மற்றும் நகைக்கடை நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தவறாமல் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்.
மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கீழசித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி என மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியமாக மதுரை மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறை
எனவே அனைத்து நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போடப்பட வேண்டும். மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்யும் நேரத்தில் தடுப்பூசி போடவில்லை என கண்டுபிடிக்கப்பட்டால் மேற்படி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நபர்களுக்கு மேல் தடுப்பூசி தேவைப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண். 8428425000 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story