உண்டியல் மூலம் ரூ.73 லட்சம் வசூல்


உண்டியல் மூலம் ரூ.73 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:05 AM IST (Updated: 3 Sept 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.73 லட்சம் வசூல்

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. பின்னர் உண்டியலில் காணிக்கையாக கிடைத்தவைகள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. அதில் 73 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரூபாய் மற்றும் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தன. மீனாட்சி அம்மன்கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story