உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை
உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமாள், தத்தனூர், சோழங்குறிச்சி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறி பயிர்கள், கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரின்றி வாடின. இந்நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதிய நேரத்தில் வெப்பம் குறைந்து லேசாக குளிர்ந்த காற்று வீசியது. மதியத்திற்கு பின்னர் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிைடயே பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
Related Tags :
Next Story