கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:28 AM IST (Updated: 3 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமுக்கு ஆலங்குளம் ஊராட்சி தலைவர் பசுபதி காத்தமை தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூரை தாழ்வார் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அதிகாரி செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் அலமேலுமங்கை, தனம், காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய சுகாதார குழு 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதேபோல் அப்பயநாயக்கர்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கணேஷ்குமார் தலைமையில் 130 பேருக்கு தடு்ப்பூசி போட்டனர்.

Next Story