போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகளால் பரபரப்பு

திருச்சி, செப்.3-
திருச்சி மாநகரில் ஜங்ஷன் கோஷ்டி, அரியமங்கலம் கோஷ்டி என இரு கோஷ்டிகளாக திருநங்கைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகளுக்கும், மத்திய பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அவதூறாக பேசியவாறு மோதிக் கொண்டனர். இருதரப்பிலும் தலா 9 பேர் வீதம் 18 திருநங்கைகள் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு உரிய சிகிச்சை பெறாமலேயே வெளியேறி விட்டனர். மோதல் குறித்து தகவல் கிடைத்ததும், கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை இரு கோஷ்டிகளை சேர்ந்ததிருநங்கைகள்முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்ட திருநங்கைகள் இருதரப்பினரிடம், சமாதானமாக போகாவிட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இறுதியாக இருதரப்பினர் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு சமாதான முடிவுக்கு வந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story