ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மேலும் ஒரு புகார்


ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மேலும் ஒரு புகார்
x
தினத்தந்தி 3 Sept 2021 1:45 AM IST (Updated: 3 Sept 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி மீது விருதுநகரை சேர்ந்த மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன்னிடம் அவர் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக தென்மண்டல ஐ.ஜி., சூப்பிரண்டுக்கு அளித்த புகார் மனுவில் கூறி இருக்கிறார்.

விருதுநகர்,

மதுரையில் ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி மீது விருதுநகரை சேர்ந்த மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன்னிடம் அவர் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாக தென்மண்டல ஐ.ஜி., சூப்பிரண்டுக்கு அளித்த புகார் மனுவில் கூறி இருக்கிறார்.

புகார் மனு

விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சக்திவேல், தென்மண்டல ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அனுப்பிய புகாரில் கூறியிருப்பதாவது:-   நான் அருப்புக்கோட்டையில் வீடு வாங்கி உள்ளேன். அந்த வீட்டில் எனக்கும் வேறு சில நபர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு என்னையும் எனது மனைவியையும் தாக்கி படுகாயப்படுத்தினர்.  இதில் என்னுடன் வந்தவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டதால் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி சிகிச்சை பெற்றோம். பின்னர் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்யக் கோரி மறுநாள் (மார்ச் 31-ந் தேதி) அப்போது அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசநதியிடம் புகார் மனு கொடுத்தேன்.
ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
நாங்கள் கொடுத்த மனுவை பெற்றுக் கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் இனி நீங்கள்அருப்புக்கோட்டை பக்கம் வரக்கூடாது என்று மிரட்டியதுடன், அருப்புக்கோட்டை பக்கம் வந்தால் நீங்கள் எதிர்தரப்பினரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டதாக மனுவை பெற்று உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டினார். மேலும் அங்கிரு்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று என்னிடமும் என் மனைவியிடமும் தெரிவித்தார்.
 இது சம்பந்தமாக நான் ஏற்கனவே எனது மனைவி மூலம் கடந்த 5-4-2021-ல் மதுரை தென் மண்டல ஐ.ஜி. மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக புகார் மனு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
தற்போது பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சம் பறித்துச் சென்றதாக வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது.
எனவே என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி, என்னை தாக்கியவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை எனது வீட்டில் குடியிருக்க வைத்த இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story