ராஜபாளையம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவும், ஊர்வலமாக செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, கட்டுப்பாடுகளுடன் விழா நடக்க அரசு அனுமதிக்க கோரி இந்து முன்னணி சார்பில் ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் உள்ள மாயூரநாதர் சுவாமி மற்றும் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகர தலைவர் சஞ்சீவி தலைமை வகித்தார். அனைத்து இந்து சமுதாய ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ராமசுப்பு, பஜ்ரங்தள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்தி முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணி, பா.ஜ.க, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.