கர்நாடகத்தில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,240 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 51 ஆயிரத்து 844 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 22 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 37 ஆயிரத்து 361 ஆக உயர்ந்து உள்ளது.

  நேற்று 1,252 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 96 ஆயிரத்து 79 ஆக உள்ளது. 18 ஆயிரத்து 378 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பெங்களூரு நகரில் 319 பேர், தட்சிண கன்னடாவில் 264 பேர், உடுப்பியில் 111 பேர் உள்பட 1,240 பேருக்கு பாதிப்பு உறுதியானது. பெங்களூரு நகரில் 4 பேர், பெலகாவியில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர் உள்பட 22 பேர் இறந்து உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story