பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்:
பா.ஜ.க. சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர்கள் கங்காதரன், கார்த்திக்வினோத், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் தண்டபாணி உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பரப்புரையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோரை நியமிக்கும் போது ஏற்கனவே பணியில் இருந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும். தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story