கடையை உடைத்து ரூ.10 லட்சம் செல்போன்கள்- பணம் கொள்ளை


கடையை உடைத்து ரூ.10 லட்சம் செல்போன்கள்- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 3 Sept 2021 2:21 AM IST (Updated: 3 Sept 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் செல்போன் கடையை உடைத்து ரூ.10 லட்சம் செல்போன்கள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்

புளியங்குடி:
புளியங்குடியில் செல்போன் கடையில் ரூ.10 லட்சம் செல்போன்கள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ரூ.10 லட்சம் செல்போன்கள்

புளியங்குடி பஸ்நிலையம் அருகே வாசுதேவநல்லூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரது மகன் முத்துசாமி (வயது 35) செல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த 30 செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள், மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுபற்றி புளியங்குடி போலீசில் முத்துசாமி புகார் செய்தார்.
கொள்ளை போன செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

மற்றொரு கடையிலும் கொள்ளை

இதேபோல் பழைய மார்க்கெட் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையிலும் பூட்டை உடைத்து 6 செல்போன்கள், ரூ.3 ஆயிரம் திருடு போனது. பின்னர் மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு கடையிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரே இரவில் மூன்று கடைகளில் நடைபெற்றுள்ள இந்த திருட்டின் காரணமாக புளியங்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story