விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு


விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Sept 2021 2:28 AM IST (Updated: 3 Sept 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஒட்டன்சத்திரம்: 

ஒட்டன்சத்திரம் அருகே காலிப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). விவசாயி. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு ேதாட்டத்துக்கு சென்றார். 


பின்னர் இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story