லடாக் வரை சைக்கிள் விழிப்புணர்வு பயணம்


லடாக் வரை சைக்கிள் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 3 Sept 2021 6:20 AM IST (Updated: 3 Sept 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

புத்தக வாசிப்பை வலியுறுத்தி கரூர் வாலிபர் லடாக் வரை சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார்.

கரூர்,
கரூர் வெங்கமேடு, ரொட்டிக்கடை தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன். சிறுவயதில் இருந்து புத்தக வாசிப்பின் மீது இவருக்கு அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் பொதுமக்களிடத்தில் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழ் சங்க காலப்புலவர்கள் நினைவுத்தூண் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து, காஷ்மீர் மாநிலம் லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
இதில் 11 மாநிலங்களை கடந்து, 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சைக்கிள் பயணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சந்தித்து கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Next Story