வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Sept 2021 6:20 AM IST (Updated: 3 Sept 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் மெயின் ரோடு முதல் மேரிலேண்ட் வரை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் போடப்பட்ட சாலை, 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் மைனலைமட்டம் முதல் கிட்டட்டி மட்டம் வரை அமைக்கப்பட்ட சாலை,

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மைனலைமட்டம் பகுதியில் ரூ.3.82 லட்சம் செலவில் குடிநீர் திட்ட பணிகள், 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட அப்புக்கோடு மயான கான்கிரீட் சாலை, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.24.12 லட்சம் மதிப்பில் அப்புக்கோடு உமர்கண்டி கான்கிரீட் சாலை ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story