கூட்டநெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் 2 டோஸ் தடுப்பூசி போட்ட ஆண்கள் மின்சார ரெயிலில் பயணிக்கலாம்: ரெயில்வே
சென்னையில் மின்சார ரெயில்களில் ஆண் பயணிகள், கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே பயணிக்க ரெயில்வே கோட்டம் அனுமதி அளித்திருந்தது. தற்போது மின்சார ரெயிலில் ஆண் பயணிகள் பயணிக்க விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி கூடுதல் தளர்வுகளை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர்கள் உள்பட அனைவருக்கும் அனைத்து விதமான டிக்கெட்டுகளும் கவுண்ட்டர்களில் வழங்கப்படும். ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டநெரிசல் அதிகமுள்ள காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களிலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து ஆண் பணிகளும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை கவுண்ட்டர்களில் காண்பித்து ஆண் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
அதேநேரத்தில் மாணவர்களை தவிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்காத தனியார் நிறுவன ஆண் ஊழியர்களும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை கொண்டு வராத ஆண் பயணிகளும் கூட்டநெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story