மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 3 Sep 2021 12:14 PM GMT (Updated: 2021-09-03T17:44:07+05:30)

ஆரணியில் மோட்டார்சைக்கிள் மோதி மனைவி, பேத்தி கண் முன்பே முதியவர் பரிதாபமாக இறந்தார்.

ஆரணி

ஆரணியில் மோட்டார்சைக்கிள் மோதி மனைவி, பேத்தி கண் முன்பே முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை முள்ளிப்பட்டு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 70). 

இவரும், இவரது மனைவி கமலா, பேத்தி சிந்துஜா ஆகிய மூவரும் நேற்று  இரவு டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து விட்டு மீண்டும் அவ்வழியாக நடந்து சென்றனர். 

அப்போது, ஆரணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், முதியவர் மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். 

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த அவரை மனைவி கமலா, பேத்தி சிந்துஜா ஆகியோர் அருகில் இருந்தவர்களின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி நகர அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் மணி இறந்து போனதாக தெரிவித்தனர். இதனால் இருவரும் கதறி அழுதனர். 

இந்த சம்பவம் குறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் முதியவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், அதனை ஓட்டிவந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.

Next Story