வாணியம்பாடியில் என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்


வாணியம்பாடியில் என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்
x
தினத்தந்தி 3 Sep 2021 12:19 PM GMT (Updated: 3 Sep 2021 12:19 PM GMT)

வாணியம்பாடியில் என்ஜின் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் கேட் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் என்ஜின் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் கேட் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

என்ஜின் கோளாறு

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து, ஐதராபாத் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ெரயில் திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டி - வாணியம்பாடிக்கு இடையே நேற்று திடீரென்று என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நின்றது. இதனால் பின்னால் வந்த இரண்டு சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் வாணியம்பாடி- நியூடவுன் ரயில்வே கேட் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து மூடப்பட்டது.

இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஒருமணி நேரம் தாமதம்

ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடியிலிருந்து என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், சுமார் 1 மணி நேரம் தாமதமாக சபரி எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட்டு சென்றது.

அதன் பின்னர் வந்த இரண்டு சரக்கு ெரயில்களும் வாணியம்பாடியை கடந்து சென்ற பின்னர், கேட் திறக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். அதன் பின்னர் அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story